Recent Post

Saturday, 25 October 2014

மும்பையில் வெற்றி பெற்ற 36 எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்கள் 2 பேர் முதுகலை பட்டதாரிகள்



மும்பை,

மும்பையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற 36 எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் 2 பேர் மட்டுமே முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

12-ம் வகுப்பு வரை 21 பேர்

மராட்டிய சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 21 பேர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளனர். இதில் சாந்திவிலி காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது ஆரிப் நசீம் கான் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். 12 பேர் இளங்கலை பட்டம் பெற்று உள்ளனர். 2 பேர் முதுகலை பட்டம் பெற்று உள்ளனர்.

இவர்களில் அதிகபட்சமாக வெர்சோவா பா.ஜனதா வேட்பாளர் பாரதி லாவேக்கர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி. படித்து உள்ளார்.

கோடீஸ்வரர்கள்

மும்பையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36 எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்கள் ஆவர். இவர்களில் அதிகப்பட்சமாக பா.ஜனதா சார்பில் மலபார்ல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மங்கல் பிரபாத் லோதா ரூ.198 கோடியே 62 லட்சத்திற்கு அதிபதி ஆவார். இவரை அடுத்து சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மிக்கு ரூ.156 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

குற்ற வழக்குகள்

இதேபோல் 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 13 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதிகப்பட்சமாக சிவனோ எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவசேனா வேட்பாளர் சதா சர்வான்கர் மீது மட்டும் மானபங்கம், கொலை முயற்சி என 27 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேப்போல் சமாஜ்வாடி கட்சி அபு ஆஸ்மி மீது 12 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment

Like Us

Contact Form

Name

Email *

Message *