நியூயார்க்கில் மோடி வரவேற்பில் அமெரிக்க அழகி பங்கேற்பு: இந்தியர்கள் ஏற்பாடு

வாஷிங்டன், செப். 12-
பிரதமர் பதவி ஏற்ற பிறகு நரேந்திர மோடி முதன் முதலாக இந்த மாதக் கடைசியில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் 26-ந் தேதி நியூயார்க் போய்ச்சேருகிறார். மறுநாளில் (27-ந் தேதி) அங்கு ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். அமெரிக்க தொழில் அதிபர்களையும் சந்தித்து, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
28-ந் தேதி அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நியூயார்க்கில் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்குள்ள மேடிசன் சதுக்க கார்டனில் நடக்கிற விழாவில், 20 ஆயிரம் இந்தியர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவில் 20 நகரங்களில் இந்தியர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ‘மிஸ் அமெரிக்கா’ அழகி நினா தவுலுரி (வயது 25) கலந்து கொள்கிறார். இவர் ‘மிஸ் அமெரிக்கா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க வாழ் இந்தியப்பெண் என்ற சிறப்புக்கு உரியவர். மேலும், பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரி சீனிவாசன், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
இது தொடர்பாக இந்திய அமெரிக்க சமூக அறக்கட்டளை (ஐஏசிஎப்) செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஷா கூறியதாவது:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான நரேந்திர மோடியின் பேச்சை கேட்பதற்கு, உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் குடிமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு அமெரிக்காவில் உள்ள 400-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகளின் ஆதரவு உள்ளது. பிரதமர் மோடிக்கு அளிக்கப்படவுள்ள பிரமாண்ட வரவேற்பில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகுந்த ஊக்கம் கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் இலவசம்தான்.
அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே வலுவான நட்பினை ஏற்படுத்துவதற்கு தங்கள் ஆதரவினை தெரிவிக்கும் வகையில், பல்லாயிரக்கணக்கான தனி நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தாராளமாக நன்கொடை வழங்கி உள்ளனர். விழாவில் கலந்து கொள்வதற்கு, அரங்கில் உள்ள இருக்கைகளுக்கு அதிகமாகவே விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுகிற விருந்தினர்கள் லாட்டரி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment