Recent Post

Monday, 22 September 2014

நெல்லையில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து: 2 ஊழியர்கள் படுகாயம்



நெல்லையில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து: 2 ஊழியர்கள் படுகாயம்
நெல்லையில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து: 2 ஊழியர்கள் படுகாயம் 
நெல்லை, செப். 22–
நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பின்புறம் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான டேங்கர் லாரிகள் மூலம் ஆயில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
வழக்கம் போல இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். தென்பத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது28). ராஜவல்லி புரத்தை சேர்ந்த முருகன் (20) ஆகிய 2 பேரும் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆயில் டேங்கை பம்ப் மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து தீப்பொறி பறந்தது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மணிகண்டன், முருகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு பாளையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த 2 ஊழியர்களையும் தச்சநல்லூர் போலீசார் விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணிகண்டன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment

Like Us

Contact Form

Name

Email *

Message *