Recent Post

Monday, 22 September 2014

கடலோர காவல்படை அதிகாரி மகள் 10–வது வகுப்பு மாணவி தற்கொலை



கடலோர காவல்படை அதிகாரி மகள் 10–வது வகுப்பு மாணவி தற்கொலை
கடலோர காவல்படை அதிகாரி மகள் 10–வது வகுப்பு மாணவி தற்கொலை 
ஆலந்தூர், செப். 22–
கடலோர காவல்படை அதிகாரியாக இருப்பவர் சுரேந்திரகுமார் ராம்.
இவர் பழவந்தாங்கலை அடுத்த நல்ல நல்லூர் ரகுபதி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் அனுகுமாரி(15).
பழவந்தாங்கலில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 10–வது வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லை.
மதியம் சுரேந்திரகுமார் ராம் வீட்டுக்கு வந்த போது மாணவி அனுகுமாரி, வீட்டில் உள்ள மின்விசியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பழவந்தாங்கல் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த 12–ந் தேதி நடந்த தேர்வை மாணவி அனுகுமாரி எழுத வில்லை.
இது பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்று பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடக்கிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)

No comments:

Post a Comment

Like Us

Contact Form

Name

Email *

Message *