ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகைகள் கொள்ளை
ராமநாதபுரம், செப். 22–
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பொன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் புல்லாணி. இவரது மனைவி பரமேசுவரி (வயது28).
இவர் கிராமத்தில் இருந்து ராமநாதபுரம் அரண்மனைக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தங்கள் சொந்த ஊரான வெள்ளா கிராமத்திற்கு செல்ல மற்றொரு பஸ் ஏறினார்.
அப்போது பஸ்சில் டிக்கெட் எடுப்பதற்காக தனது கைப்பையை பார்த்த போது அது திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனுள் இருந்த 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு தங்க சங்கிலி என மொத்தம் 9 பவுன் நகையை யாரோ ‘அபேஸ்’ செய்து விட்டனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் பரமேசு வரி புகார்செய்தார். அதில் திருட்டுப்போன நகைகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:
Post a Comment