ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் ஜிதுராய் தங்கம் வென்றார்

இன்சியான், செப். 19-
17-வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவின் இன்சியான் நகரில் நேற்று தொடங்கியது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 9,429 வீரர், வீராங்கனைகள் 36 வகையான போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 516 பேர் கொண்ட குழுவினர் தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை, சுவேதா சவுத்ரி பெற்று தந்துள்ளார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சுவேதா வெண்கல பதக்கம் வென்றார். இது இந்தியாவிற்கு முதல் பதக்கமாகும். இதே பிரிவில் விளையாடிய ஹீனா சித்து ,மலாய்காகோயல் ஆகியோர் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினர்.
ஆண்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர ஜிது ராய் முதல் தங்கம் வென்றார். ஜிது ராய் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்றவர். கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment