புதுடெல்லி,
இந்திரா காந்தி நினைவு தினத்தை பிரதமர் மோடி புறக்கணித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஜனாதிபதி அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 30-வது நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள சக்தி ஸ்தலில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நினைவு தினத்தையொட்டி சக்தி ஸ்தலில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. மேலும் நிகழ்ச்சியொன்றில் இந்திரா காந்தி நிகழ்த்திய உரையும் ஒலிபரப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியை சேர்ந்த மோதிலால் வோரா, வீரப்ப மொய்லி, சுசில்குமார் ஷிண்டே, அகமது படேல், பூபிந்தர் சிங் ஹூடா, குலாம் நபி ஆசாத், திக்விஜய் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
படேல் பிறந்த தினம்
இந்தநிலையில் முதல் உள்துறை மந்திரியும், இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமும் நேற்று கொண்டாடப்பட்டது. இதை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடிய மத்திய அரசு, நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடத்தியது.
இதையொட்டி வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, டெல்லியில் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது நவீன இந்தியாவின் சிற்பியாக வல்லபாய் படேல் விளங்கியதாக புகழாரம் சூட்டினார்.
மோடி பங்கேற்கவில்லை
ஆனால் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. இந்திரா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் ஒருவர் அஞ்சலி செலுத்தாதது, இதுவே முதல் முறையாகும். பா.ஜனதாவை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போதுகூட, இந்திரா காந்தியின் நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் பிரதமர் மோடி நேற்று காலையில் தனது ‘டுவிட்டர்’ இணையதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளில், அவரை நினைவுகூரும் நாட்டு மக்களுடன் நானும் இணைந்துள்ளேன்’ என்று கூறியிருந்தார். மேலும் ஒற்றுமைக்கான ஓட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போதும், ‘இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள்’ என்று நினைவு கூர்ந்திருந்தார்.
இந்திராவுக்கு அவமரியாதை
சக்தி ஸ்தலில் அஞ்சலி செலுத்துவதை மோடி தவிர்த்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரதமர் மோடியை காங்கிரசார் குறைகூறியுள்ளனர். இது குறித்து டெல்லி மேல்-சபையின் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா ‘‘இது ஒரு மிகவும் கீழ்த்தரமான, பாகுபாடான செயல். நாட்டுக்காக தனது உயிரை ஈந்தவர்களுக்கு, குறிப்பாக தேச ஒற்றுமைக்காக தன்னையே அர்ப்பணித்த இந்திரா காந்திக்கு செலுத்தும் அவமரியாதை ஆகும் என்றார்.
பா.ஜனதா பதில்
ஆனால் காங்கிரசின் குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது. இது குறித்து மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறும்போது, ‘எந்த ஒரு தலைவரின் முக்கியத்துவத்தையும் சிறுமைப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. இந்திய வரலாற்றில் ஒவ்வொரு தலைவருக்கும் இடமுண்டு. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இந்தியாவின் மிகப்பெரும் தலைவர்களில் சர்தார் படேல் ஒருவர். சுதந்திர போராட்ட வீரரான அவர், இந்தியாவை ஒருங்கிணைத்தார்’ என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment