மத்திய அரசின் மானியச் சலுகை அல்லாத வர்த்தக கியாஸ் சிலிண்டர் ஒன்று (14.2 கிலோ எடை கொண்டது), சென்னையில் ரூ.883-க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை 19 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இனிமேல் ஒரு சிலிண்டரின் விலை ரூ.863.50 ஆகும். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததால், இந்த விலை குறைப்பு செய்யப்பட்டது.
டெல்லியில் ஒரு சிலிண்டர் விலை ரூ.865 ஆகவும், மும்பையில் ரூ.887, கொல்கத்தாவில் ரூ.905 ஆகவும் விலை குறைந்தது. இதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கியாஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.1,665, டெல்லியில் ரூ.1,449, மும்பையில் ரூ.1,540, கொல்கத்தாவில் ரூ.1,532 ஆக விலை குறைக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த ஜூன் முதல் இதுவரை 20 சதவீதம் விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment